» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு : இணையத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்!!

வியாழன் 4, ஜூன் 2020 4:53:32 PM (IST)

10,11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இனையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரையும் நடைபெற உள்ளன. 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு 16.06.2020 அன்றும், 24.03.2020 அன்றும் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்றும் நடைபெறவுள்ளன.

மேற்குறிப்பிட்ட தேர்வுகளை எழுதவுள்ள அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 04.06.2020 பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று Hall ticket என்ற வாசகத்தினை க்ளிக் செய்து தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் தேர்வுகள் தொடர்பான விவரங்களை அறிய, தேர்வுக் கூட நுழைவுச்சீட்டின் கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்டுள்ள அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் 04.06.2020 பிற்பகல் முதல் தங்கள் பள்ளித் தலைமையாசிரியரைத் தொடர்பு கொண்டு தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று Hall ticket என்ற வாசகத்தினை க்ளிக் செய்து தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை இணையதளம் மூலம் பதிவு செய்து தாங்களே தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory