» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநர் நியமனம்: மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி

வியாழன் 4, ஜூன் 2020 4:30:46 PM (IST)

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு முதல் இயக்குநர் நியமனத்திற்கு மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

செம்மொழி தமிழ் குறித்து ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக சென்னையில் 2008ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் முதலமைச்சர்தான் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் ஆவார். இது கவுரவப் பதவியாகும். 

இந்நிலையில் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரனை நியமித்து மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டார். பேராசிரியர் சந்திரசேகரனை நியமித்ததை பாராட்டி மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு ரஜினிகாந்த் கடிதம் எழுதி உள்ளார். அதில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுக்கும் முயற்சிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory