» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா வைரஸ் உடன் வாழப் பழகுவது எப்படி ? : மருத்துவர் விளக்கம்

செவ்வாய் 2, ஜூன் 2020 7:34:35 PM (IST)

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரசை எதிர்கொள்வது எப்படி என்றும் இனி நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் ஈரோட்டை சேர்ந்த மருத்துவர் அருண்குமார் என்பவர் வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஈரோட்டை சேர்ந்த மருத்துவர் அருண்குமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது, நாம் கடந்த 3 மாத காலமாக கரோனா வைரஸ் குறித்து நிறைய பேசி விட்டோம். ஆரம்பத்தில் இதை நினைத்து நாம் மிகவும் பயந்தோம். கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனால் அப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது பொதுமக்களுக்கு கரோனாவைரஸ் குறித்த அச்சம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கரோனா வைரஸ் குறித்த அச்சம் தேவையா என்றால் இது குறித்து அதிகம் பயப்படத் தேவையில்லை. தற்போது மக்களிடையே கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர் இறந்துவிடுவார் என்று பொதுமக்கள் நினைத்த நிலையில் தற்போது 100 க்கு 99 பேர் நோயிலிருந்து குணமடைந்து வருகின்றனர். இதில் வைரஸ் தொற்று பாதித்தது கூட தெரியாமல் இருந்தவர்கள் கூட இந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். மீதமுள்ள ஒரு சதவீதம் பேர்தான் இறக்கின்றனர். ஆனால் ஆரம்பத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அதிகம்பேர் இறந்ததும் வெளிநாட்டிலேயே அதிகம் பேர் உயிரிழந்ததாக தொலைக்காட்சியில் காண்பது குறித்து பொதுமக்களுக்கு சந்தேகங்கள் இருக்கலாம்.

எந்த ஒரு தொற்றுநோயும் ஆரம்பிக்கும்போது அதனால் மிகவும் பாதித்தவர் மட்டுமே மருத்துவமனைக்கு வருவார்கள். அதனால் இறந்தவர்கள் அதிகம் என்பது போல் தெரியும். இதற்கு முன்பு ஸ்வைன் ப்ளூ காய்ச்சல் பரவிய போதும் அதன் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த அறிகுறிகளே இல்லாமல் வீட்டில் இருந்தனர். பத்தாயிரத்தில் ஒருவர் கூட ஸ்வைன் ப்ளூ வால் இறக்கவில்லை என தெரியவந்துள்ளது. தற்போது கரோனா வைரஸ் அதே திசையில்தான் பயணிக்கிறது. மருத்துவமனைக்கு வருபவர்களை மட்டுமே கணக்கு எடுப்பதால் அதிகம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டது போல் தெரிகிறது. ஆனால் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டது கூட தெரியாமல் வீட்டில் இருப்பவருக்கு தானாகவே குணமாகியுள்ளது.  ஒரே சமயத்தில் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு இருக்கும் போது அதிகமான பாதிக்கப்பட்டது போல் தெரியும்.

ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்படவில்லை என்பது தான் உண்மை. எனவே கரோனா வைரஸை நாம் எதிர்கொள்வது எப்படி ? இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றால் உங்கள் வயது 40க்கு கீழ் இருந்தால் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை 0.04 சதவிதம் மட்டுமே 40 வயதுக்கு அதிகமாக இருந்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒரு சதவீதம் இரண்டு சதவிதம் என அதிகரிக்கும். நீரிழிவு நோய், உடல் பருமன், ரத்தக் கொதிப்பு இல்லாதவர்கள் வழக்கம்போல் தங்கள் வேலைகளுக்கு செல்லலாம். இவை இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனால் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

பிறருக்கு கை கொடுக்க வேண்டாம். வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுங்கள். கரோனா வைரஸ் குறித்த பீதி பயம் தேவையில்லை. ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு  வைரஸ் தொற்று இருக்குமோ என பயப்பட தேவை இல்லை. ஆனால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தவைரஸ் தொற்று எப்போது முடிவடையும் என நிறைய பேருக்கு கேள்வி எழுந்துள்ளது. இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் ஆகும் என தெரிகிறது. ஆனால் இயற்கையாகவே மந்தை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் பலருக்கு சாதாரண சளி ,காய்ச்சல் போல் வந்து செல்லும். பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி சமூக பரவல் நின்றுவிடும்.

அந்த நிலை வருவதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் எனக் கூறுகிறார்கள். ஆனால் அது வரைக்கும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். எனக்கு கரோனா வைரஸ் வராது என அலட்சியமாக இருப்பதும் தவறு. அதேசமயம் கரோனா வைரஸ் தனக்கு வந்து விடுமோ என எண்ணியே பயப்படும் தவறு. எனவே பீதி அடைய வேண்டாம். பயப்படவும் வேண்டாம். எச்சரிக்கையாக இருந்தாலே போதும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலே கரோனா வைரசில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory