» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதாவை இழிவுபடுத்தி வீடியோ வெளிட்டவர் மீது நடவடிக்கை : அதிமுக புகார்

செவ்வாய் 2, ஜூன் 2020 5:26:44 PM (IST)


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையில் அதிமுக நிர்வாகி புகார் தெரிவித்துள்ளார்

இது குறித்து திருநெல்வேலி மாநகர காவல்ஆணையரிடம், பாளையங்கோட்டை மகாராஜா நகரைச் சேர்ந்த கிளாசிக்பாரத் என்பவர் காவல்துறையில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது, பேராயர் காட்பிரே வாஷிங்டன்  நோபுள் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் கடந்த மே 17ஆம் தேதியன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவருக்கு கூறியுள்ள கருத்துக்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், அவரது வாழ்க்கையை இழிவு படுத்துவதாக உள்ளது. மறைந்த ஜெயலலிதா மீது பொதுமக்களுக்கு தவறான எண்ணம் வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இவ்வாறு செய்தி பதிவிட்டிருந்தார். எனவே தாங்கள் ஜெயலலிதாவுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பதிவிட்ட காட்பிரே வாஷிங்டன் நோபுள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என மனுவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory