» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வழங்கினார்

திங்கள் 30, மார்ச் 2020 3:35:56 PM (IST)

கரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி  மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.  

கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பை சமாளிக்க உதவிடும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். 

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 67 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். மாவட்டந் தோறும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குற்ப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory