» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க ஸ்டாலின் அறிவிப்பு

திங்கள் 30, மார்ச் 2020 12:23:40 PM (IST)

கரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது என, அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது. மேற்கண்ட நிதி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory