» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட இருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைப்பு

திங்கள் 30, மார்ச் 2020 11:05:24 AM (IST)

தமிழகத்தில் ஏப்ரல் 1ம்  தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருந்த  ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சோதனை முறையாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம்  தேதி முதல் தமிழகம் முழுவதும் அமல்படுததப்பட இருந்தது. தற்போது, கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று திருவாரூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory