» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா பரவலை தடுக்க வீடு வீடாக ஆய்வு நடத்தலாம் : ராமதாஸ் யோசனை

திங்கள் 30, மார்ச் 2020 10:22:48 AM (IST)

கரோனா பாதிப்பு தொடர்பாக தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக ஆய்வு நடத்தலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு அடுத்த கட்ட நட வடிக்கையை தீவிரப் படுத்தியுள்ளது. தற்போது 10 மாவட்டங்களில் படுதீவிரமான நடவடிக்கையை தமிழக அரசு முடுக்கிவிட்டிருக்கிறது.இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வந்த நிலையில், தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வியமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார்.

இது வரவேற்கத்தக்கது. ஆனால், கல்வியமைச்சரின் அறிவுரையை எத்தனை பள்ளிகள் பின்பற்றும் என்பது தெரியவில்லை. ஆகவே, தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணங்களை அடுத்த 3 மாதங்களுக்கு வசூலிக்கக் கூடாது என்று அரசாணை பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள இடத்திலிருந்து 7கி.மீ சுற்றளவில் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக இத்தகைய ஆய்வை நடத்த அரசு தயாராக வேண்டும்  கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள இடத்திலிருந்து 7கி.மீ சுற்றளவில் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக இத்தகைய ஆய்வை நடத்த அரசு தயாராக வேண்டும்! என்று டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory