» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அரசின் இலவச ரேஷன் பொருள்கள், ரூ. 1000 நிவாரணம்: ஏப்ரல் 2 முதல் விநியோகம்

ஞாயிறு 29, மார்ச் 2020 7:10:08 PM (IST)

தமிழக அரசு சார்பில் இலவச ரேஷன் பொருள்கள், ரூ. 1000 நிவாரணம் ஆகியவை ஏப்ரல் 2ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. 

கரோனா வைரஸ் பாதிப்பு நிவாரணமாக, அரிசி கார்டுதாரரர்களுக்கு, தலா, 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இவற்றின் வினியோகம், ரேஷன் கடைகளில், ஏப்ரல் 2ம் தேதி முதல் துவங்குகிறது. ரேஷன் கடைகள், ஏப்ரல் 3ம் தேதி, வழக்கம் போல செயல்படும் என, தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதலாவது, இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை. அதற்கு மாற்றாக, அவை, அந்த வார ஞாயிற்று கிழமைகளில் செயல்படும். வெள்ளிக்கிழமை பணி செய்வதால் வேறொரு நாளில், ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory