» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீட்டை விட்டு வெளியே வந்தால் மக்களை அடிக்க கூடாது: வாகனங்களை பறிமுதல் செய்ய அறிவுறுத்தல்!

ஞாயிறு 29, மார்ச் 2020 9:11:06 AM (IST)

கோவையில் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்களை அடித்து துன்புறுத்த கூடாது. வாகனங்களை பறிமுதல் செய்யலாம் என்று போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சுஜித்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

கரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி ஏராளமானவர்கள் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிகிறார்கள். இதை கண்காணிக்க கோவை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவை சிங்காநல்லூர், பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் வீட்டைவிட்டு வெளியே வந்த வாகன ஓட்டிகளை போலீசார் லத்தியால் அடித்து துன்புறுத்தினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மக்களை அடித்து துன்புறுத்த கூடாது என்றும், வீட்டைவிட்டு வெளியே வந்தால் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யலாம் என்றும் கோவை மாவட்ட எஸ்பி ‘வாக்கி டாக்கி’ மூலம் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

கோவை மாவட்டத்தில் நேற்று தடையை மீறி வாகனம் ஓட்டி வந்தவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அத்துடன் சரியான காரணத்தை சொன்னவர்களை போலீசார் அனுப்பிவிட்டனர். முன்னுக்குப்பின் முரணாக பேசியவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்போட்டனர். மேலும் ஒருசிலர் கைதுசெய்யப்பட்டனர். அதில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 134 பேர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அதுபோன்று 104 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory