» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து - ரூ.30 லட்சம் பொருட்கள் சேதம்

ஞாயிறு 29, மார்ச் 2020 8:58:44 AM (IST)

ஆவடியில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

ஆவடி செக்போஸ்ட் அருகே சி.டி.எச். சாலையில் கொரட்டூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த ராஜப்பா என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மூன்று மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் தரை தளத்தில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளும், முதல் 2-வது மற்றும் 3-வது தளங்களில் மேசை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்களும் விற்பனை செய்யப்பட்டன. கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தற்போது இந்த சூப்பர் மார்க்கெட் மூடப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலையில் சூப்பர் மார்க்கெட்டின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு அதில் இருந்து கரும்புகை வெளியானது. 

இதை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ஆவடி போலீசார் பார்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 23 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சூப்பர் மார்க்கெட்டில் எரிந்த தீயை 1 மணிநேரம் போராடி அணைத்தனர்.தரைதளத்தில் உள்ள ஏ.சி. யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தீ விபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory