» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்வு!!

சனி 28, மார்ச் 2020 12:19:18 PM (IST)

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வருகிறது கரோனா வைரஸ். தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு  கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் நேற்று நிலவரப்படி, 38 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். 

இந்நிலையில், மேலும் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரைச் சேர்ந்த 49 வயதான நபர் ஒருவருக்கும் கும்பகோணத்தை சேர்ந்த 42-வயது நபர் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   வேலூரை சேர்ந்த நபர், சமீபத்தில் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டிருந்தார் எனவும்  கும்பகோணத்தை சேர்ந்தவர் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று வந்திருந்தார் எனவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory