» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதால் வெறிச்செயல்: மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்!!

சனி 28, மார்ச் 2020 12:06:04 PM (IST)

போடியில், இலங்கையிலிருந்து போடிக்கு வந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்  கடித்ததால் காயமடைந்த மூதாட்டி இறந்து போனார். 

தேனி மாவட்டம் போடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமநாதன் மகன் மணிகண்டன் (34).  இவர் இலங்கைக்கு ஜவுளி வியாபாரம் சென்றவர் மார்ச் 21 ஆம் தேதி ஊருக்கு திரும்பினார். வெளிநாட்டிலிருந்து வந்ததால் இவர் சுகாதாரத் துறையினரால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வந்தார். 

இவர் வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து நிர்வாணமாக ஓடி வந்து அருகில் உள்ள பக்த சேவா தெருவை சேர்ந்த மூதாட்டி நாச்சியம்மாள் (75) என்பவரின் குரல்வளையை கடித்து காயப்படுத்தினார். இதில் மூதாட்டி நாச்சியம்மாள் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory