» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா தாண்டவம்: மருத்துவ பணியாளர்களுக்கு கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலின்

சனி 28, மார்ச் 2020 10:19:59 AM (IST)

கரோனா வைரஸ் தாண்டவமாடும் நேரத்தில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் கை கொடுப்போம் என்று தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளின்படி, தி.மு.க. மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு உதவிடும் வகையில் சுகாதார பாதுகாப்புக்கான பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 26-ந்தேதி சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை தலைமை டாக்டர் தணிகாசலத்திடம் 1,000 முகக்கவசங்கள், 250 கிருமிநாசினி திரவ பாட்டில்கள் வழங்கப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அதுகுறித்த காணொளியை பதிவிட்டிருந்தார்.

இதனை மேற்கோள் காட்டி, தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "துயரம் சூழ்ந்த இச்சூழலில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் முகக்கவசம், கிருமிநாசினி திரவம் (சானிடைசர்), சோப்பு ஆகியவற்றைத் திரட்டி வழங்கும் சேவையை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் செய்யவேண்டும். கரோனா வைரஸ் தாண்டவமாடும் நேரத்தில் கைகொடுக்கும் தோழர்களாய் நாம் செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory