» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சித்த மருத்துவத்தால் கரோனாவை குணப்படுத்த முடியுமா? அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 27, மார்ச் 2020 5:01:09 PM (IST)

சித்த மருத்துவத்தால் கரோனாவை குணப்படுத்த முடியுமா என பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா, அங்கும் இங்குமாகப் பரவி தமிழ்நாட்டுக்குள்ளும் நுழைந்துவிட்டது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வரும் புது வகை வைரஸான கரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. 

இந்நிலையில் தமிழரின் பாரம்பரியமான, சித்த மருத்துவத்தால் கரோனாவை குணப்படுத்த முடியுமா? என மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory