» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனாவுக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு: மதுரையை சேர்ந்தவர் பலி!

புதன் 25, மார்ச் 2020 11:18:02 AM (IST)

தமிழகத்தில் முதல் உயிரிழப்பாக கரோனாவுக்கு மதுரையை சேர்ந்தவர் நேற்று இரவில் பரிதாபமாக இறந்தார்.

உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கரோனா தொற்றுடன் தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் 15-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மதுரையை சேர்ந்த 54 வயதுடைய ஒருவர் கடந்த சில நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. 

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று இரவில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் கரோனாவுக்கு தமிழகத்தில் முதல் பலியாக சிகிச்சை பலனின்றி மதுரையை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory