» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோயமுத்தூரில் பிளாஸ்டிக் பைப்புகளில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

திங்கள் 23, மார்ச் 2020 8:02:08 PM (IST)

கோவை போத்தனூர் அருகே பாதாள சாக்கடைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைப்புகளில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்பிலான பைப்புகள் தீயில் கருகியது.

கோயமுத்தூர் போத்தனூர் அடுத்த அண்ணாபுரம் பகுதியில் பாதாள சாக்கடையில் பதிப்பதற்காக பிளாஸ்டிக் பைப்புகள் தனியார் நிறுவனம் சார்பில்  அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காலி  இடத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த இடத்தில் திடீரென தீ பிடித்தது. காற்று பலமாக வீசவே, தீ மளமளவென பரவி, அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. தொடர்ந்து பிளாஸ்டி பைப்பால் கொழுந்து விட்டு எரிந்தது.

இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பிளாஸ்டிக் பைப்புகளை தனியாக பிரிந்தெடுத்தனர். தொடர்ந்து, கோவை மாவட்ட தீயணைப்புத் துறையினர் தலைமையில் கோவை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை ஒருமணி நேரமாக போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பைப்புகள் எரிந்து சேதமானாது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory