» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திங்கள் 23, மார்ச் 2020 5:15:01 PM (IST)

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்க தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ள கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை  உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளித் தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது. 

வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று நீதிபதிகள், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்க உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். நாளையுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வும், மார்ச் 26 ஆம் தேதியுடன் பிளஸ் 1 பொதுத் தேர்வுகளும் முடிவடைய உள்ளதால் அதுவரை மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும், முக்கியமாக போக்குவரத்து சேவையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory