» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் புறக்கணிப்பு: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

திங்கள் 23, மார்ச் 2020 10:14:03 AM (IST)

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவைக்  கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக  கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார். ஆனால், மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை நடைபெறும் என்று சபாநாயகர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவையை ஒத்திவைக்கக் கோரிய திமுகவின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காத நிலையில், திமுகவே சட்டப்பேரவை கூட்டத்தொடரை முழுவதும் புறக்கணிப்பதாக இன்று அறிவித்துள்ளது. 

இதுகுறித்து திமுக கொறடா சக்கரபாணி செய்தியாளர் சந்திப்பின்போது, கரோனாவால் தமிழகத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 8,900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கரோனா பரவி வரும் நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பல முறை சட்டப்பேரவையில் வலியுறுத்தி வருகிறார். ஆனால், அரசு இதுகுறித்து முடிவெடுக்காத நிலையில், கரோனா முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரை திமுக புறக்கணிக்கிறது" என்று தெரிவித்தார். காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய திமுக கூட்டணி கட்சிகளும் சட்டப்பேரவையை புறக்கணிப்பதாக தகவல் தெரிவித்துள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory