» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுய ஊரடங்கு 100% வெற்றி: ஆட்சியர் பேட்டி

ஞாயிறு 22, மார்ச் 2020 5:42:05 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் சுய ஊரடங்கு முழுமையாக 100% வெற்றி பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரானோ சிறப்பு வார்டு அருகில் மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், ஊடகத் துறையினரின் பணிகளை பாராட்டி வாழ்த்தி நடைபெற்ற‌ கைதட்டல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் கடைகள் மூடப்பட்டு,  சுய ஊரடங்கு முழுமையாக 100% வெற்றி பெற்றுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்துள்ளனர். 

கரோனா வைரசுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு  நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 5 மணிக்கு கைதட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீடிக்கும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காலை 5 மணிக்கு பின்னர் சிறிய கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள் செயல்படலாம். பெரிய மால்கள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி இல்லை. 

வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை யாருக்கும் பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக இரண்டு பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டுடன் வருகிற 31-ஆம் தேதி வரை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலஷ் ஜெபமணி, தூத்துக்குடி துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கிருஷ்ணலீலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீனிவாசன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory