» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா வைரஸ் குறித்து வாட்ஸப்பில் அவதூறு பரப்பியதாக 3 பேர் கைது

சனி 21, மார்ச் 2020 8:40:13 PM (IST)

கரோனா குறித்து வாட்ஸப்பில் அவதூறு பரப்பியதாக புதுக்கோட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாட்ஸ்ஆப்பில் கரோனா பரவல் குறித்து அவதூறு பரப்பியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சனிக்கிழமை கூறியதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தச் சூழலில் கரோனா வைரஸ் குறித்து தவறான, அவதூறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை கட்செவி அஞ்சலில் அவதூறு செய்தியைப் பரப்பிய புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (26), ராஜ்குமார் (21), அதேபோல அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (32) ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அரசு மேற்கொண்டு வரும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார் 


மக்கள் கருத்து

அருண்Mar 23, 2020 - 11:45:44 AM | Posted IP 204.1*****

அந்த லதா மேடம மொதல்ல புடிங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory