» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு

சனி 21, மார்ச் 2020 5:40:39 PM (IST)

சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் பட்டாசு ஆலையில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி  அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றபோது, சிவகாசி பட்டாசு வெடி விபத்து தொடர்பாக திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் பேசிய திமுக எம்எல்ஏ. தங்கம் தென்னரசு, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான 9 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூபாய். 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். அதேபோல், காயமடைந்தவர்களுக்கு ரூ.50000 நிதி உதவி வழங்கப்படும். மேலும், காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.  இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையும் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory