» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊரடங்கு உத்தரவைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்

சனி 21, மார்ச் 2020 5:30:25 PM (IST)

பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரியில் நாளை 22-ம் தேதி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போது 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் மார் 22-ம் தேதி சுய ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஆகையால் அன்றைய தினம் பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள் என எதுவும் ஓடாது என அறிவித்து வருகிறார்கள். 

பிரதமர் மோடியின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அரசியல் பிரமுகர்கள், திரையுலகப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். இந்நிலையில், புதுச்சேரி அரசு எடுத்து வரும் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, கரோனா வைரஸ் நோயை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory