» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவு

சனி 21, மார்ச் 2020 1:20:33 PM (IST)

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கரோனா வைரஸ் தொற்று குறித்து கேள்வி எழுப்பினாா். அப்போது பேசிய அவா், சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை உடனடியாக தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா். இதைத் தொடா்ந்து, அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் பேரவைத் தலைவா் பி.தனபால் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்துக்குப் பிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். மேலும் மார்ச் 31ஆம் தேதி வரை பேரவை கூட்டத்தொடர் காலை, மாலை என இருவேளையும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory