» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா பாதிப்புடன் ரயிலில் வந்த நபருடன் பயணித்த 193பேர் நிலை என்ன? அமைச்சர் விளக்கம்

சனி 21, மார்ச் 2020 12:45:27 PM (IST)

கரோனா பாதிப்புடன் ரயிலில் வந்த நபருடன் பயணித்த 193 பேரை தனிமைப்படுத்தியுள்ளோம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கடந்த 10ஆம்தேதி டெல்லியிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்த இளைஞருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்தநிலையில் இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கரோனா பாதிப்புடன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தவரின் நிலை தற்போது எப்படி இருக்கிறது. 

ரயிலில் உடன் பயணித்தவர்கள் யார், யார் என்று விவரம் தெரிந்ததா?. தமிழகத்தில் கரோனா பற்றிய உண்மை நிலையை மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும். 27 மாதிரிகளின் சோதனை முடிவு இன்னும் வரவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார். அது எப்போது வரும். தமிழகத்தில் முழு அளவிலான ஐசியு எத்தனை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயாஸ்கர், கரோனா பாதிப்புடன் ரயிலில் வந்த நபருடன் பயணித்த 193 பேரை தனிமைப்படுத்தியுள்ளோம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory