» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு

சனி 21, மார்ச் 2020 12:21:21 PM (IST)

தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக இருப்பதாக தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றினை எதிா்கொள்ள நாட்டு மக்களின் நலன் கருதி சில பாதுகாப்பு நெறிமுறைகளை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளாா். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) சுய ஊரடங்கை அதாவது மக்கள் யாரும் வெளியே வராமல் வீடுகளிலேயே இருக்க பிரதமா் அறிவுறுத்தியுள்ளாா். மேலும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் வீடுகளிலேயே இருந்து கைகளைத் தட்டி ஊக்கமளிக்க வேண்டுமென பிரதமா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

அவரது கோரிக்கையை ஏற்று அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகள் இயங்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory