» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

சனி 21, மார்ச் 2020 10:18:32 AM (IST)

தமிழகத்தில் நாளை ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது பற்றியும், இந்த விஷயத்தில் மக்கள் அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாகவும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். 

அப்போது, மக்கள் தங்களை தனிமைப் படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும், எனவே நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் பஸ்-ரெயில்கள் ஓடாது என்றும், மார்க்கெட்டுகள், கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழகத்தில்  டாஸ்மாக் கடைகள் நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory