» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஞாயிறன்று இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

வெள்ளி 20, மார்ச் 2020 8:18:45 PM (IST)

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 வரை அரசு பேருந்துகள் இயங்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைவரும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வரும் ஞாயிற்றுகிழமை அனைவரும் சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் வரும் 22 ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 வரை அரசு பேருந்துகள் இயங்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனத்து அரசு, தனியார் நூலகங்கள் நாளை முதல் 31ஆம் தேதி வரை மூடப்படும் என்றார். இதனை தொடர்ந்து மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக மக்களை முதல்வர் பழனிசாமி கேட்டு கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory