» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு : தெறி படத்தின் வசனத்தை பதிவிட்டு நெல்லை டிசிபி பாராட்டு

வெள்ளி 20, மார்ச் 2020 6:05:47 PM (IST)

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு நிறைவேற்றப்பட்ட நிலையில் அது குறித்து தெறி படத்தின் வசனத்தை திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் பதிவிட்டுள்ளார்.

மருத்துவ மாணவி  நிர்பயா   2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். அதன் பிறகு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் ஷர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (33) ஆகிய நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  

7 ஆண்டுகள் கழித்து  இன்று அதிகாலை  5.30 மணிக்கு   டெல்லி திகார் சிறையில்  இவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்களும் உறுதி செய்தனர். அரை மணி நேரம் அவர்கள் நால்வரும் தூக்கில் தொங்கவிடப்பட்டதாகச் சிறைச்சாலை டிஐஜி அறிவித்துள்ளார். 

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன், கடைசியா.. டீ சொல்லுங்க ராஜேந்திரன் என நடிகர் விஜய் நடித்த தெறி படத்தின் வசனத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory