» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை : தண்டவாளத்தில் படுத்து செல்பி

வெள்ளி 20, மார்ச் 2020 4:56:55 PM (IST)

ஆம்பூர் அருகே திருமணமாகி ஒரு நாளேயான காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் மேம்பட்டி சாமரிஷிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (29), வாணியம்பாடி புதூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில் திருமணமான முதல்நாளே காதல் ஜோடியான இருவரும் ஆம்பூர் அடுத்த வீரவர் கோயில் பகுதியில் சென்னை - பெங்களூர் செல்லும் ரயில்வே மார்க்கத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். சடலத்தை மீட்ட  ஜோலார்பேட்டை  ரயில்வே போலீஸார் மற்றும் ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்யும் முன்பு இருவரும் தண்டவாளத்தில் படுத்து செல்ஃபி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

அருண்Mar 21, 2020 - 02:26:25 PM | Posted IP 157.5*****

வெறிதான் எல்லாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory