» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிஏஏ : வன்முறையில ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்

புதன் 26, பிப்ரவரி 2020 5:04:39 PM (IST)

சிஏஏ என்ற பெயரில் வன்முறையில ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே நடைபெறும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. இதற்கிடையே, இந்தப் போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிஏஏக்கு ஆதரவாகவும் ஜாஃப்ராபாத் அருகில் உள்ள மெளஜ்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இரு தரப்பினரும் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். 

இதைத் தொடர்ந்து வன்முறை மெளஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவியது. எனவே, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மெளஜ்பூர், பிரம்மபுரி, கஜோரி காஸ், பஜன்புரா உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வன்முறைப் பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பும் நடத்தினர். எனினும், ஆங்காங்கே வன்முறை தொடர்கிறது. டெல்லி வன்முறைக்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தனது டிவிட்டரில், சிஏஏ என்ற பெயரில் நடந்தேறும் வன்முறை, நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் குலைக்கும் எந்த ஒரு செயலும் இனி தொடராமல் செய்வது நமது ஒவ்வொருவரது கடமை. அரசாங்கம் பாரபட்சமின்றி வன்முறையில ஈடுபடும் எவராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து

PSCCFeb 27, 2020 - 03:26:07 PM | Posted IP 162.1*****

எப்படி எப்படி ... என்ன அண்ணாச்சி சொல்லுறீங்க .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory