» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு: சத்தியநாராயணா ராவ் பேட்டி

புதன் 26, பிப்ரவரி 2020 4:55:06 PM (IST)

ரஜினியின் கட்சி அறிவிப்பு தமிழப் புத்தாண்டில் வெளியாகும் என்று அவரது அண்ணன் சத்தியநாராயணா ராவ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,  பர்கூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா ராவ் செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக தெரிவித்தது: ரஜினிகாந்த் தமிழ்ப் புத்தாண்டில் கட்சியை அறிவிப்பார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து ரஜினி முடிவு செய்வார். மத்தியில் நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி செய்கிறார். அமெரிக்க அதிபர் இந்திய வருகையின்போது எதிர்க்கட்சிகள் தூண்டுதலால் தில்லியில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. கூட்டணி குறித்து ரஜினியே முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory