» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: சிபிஐ பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

வெள்ளி 21, பிப்ரவரி 2020 3:18:38 PM (IST)

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோருவது குறித்து சிபிஐ பதில் மனு தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வுகளில் முறைகேடு செய்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் முக்கிய புள்ளிகள் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்  என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
 
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சிபிஐ, டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை மார்ச் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory