» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரு கிராம் 4 ஆயிரத்தைத் தாண்டியது

வெள்ளி 21, பிப்ரவரி 2020 12:26:14 PM (IST)

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 

இன்று காலை நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் 4 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயர்ந்தது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சவரன் தங்கம் ரூ.32 ஆயிரத்தைத் தாண்டியது. போா் பதற்றம் குறைந்த பிறகு, தங்கம் விலை குறைந்தது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகின்றது. 

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக் கிழமையான இன்று(பிப்.21) சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.32,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.4,012-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த 38 நாட்களில் மட்டும் சுமார் 2000 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது. 

அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ரூ.52.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.52,300 ஆகவும் விற்கப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 4,012

1 சவரன் தங்கம் ..................... 32,096

1 கிராம் வெள்ளி .................. 52.30

1 கிலோ வெள்ளி ................. 51,300

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,978

1 சவரன் தங்கம் ..................... 31,824

1 கிராம் வெள்ளி .................. 51.60

1 கிலோ வெள்ளி ................. 51,600


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Feb 24, 2020 - 01:03:00 PM | Posted IP 162.1*****

இன்று (24 -2-2020) 4100 ரூபாய்.

அருண்Feb 23, 2020 - 07:28:32 PM | Posted IP 106.2*****

நல்ல வேல போன மாசம் தான் 4 பவுன் வாங்கி வச்சேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory