» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்மிககுரு பங்காரு அடிகளார் முத்து விழா : ரூ.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வியாழன் 20, பிப்ரவரி 2020 9:06:12 PM (IST)ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் - திருமதி. இலட்சுமி பங்காரு அடிகளார் அவர்களின் முத்து விழாவை முன்னிட்டு ரூ.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆதிபராசக்தி கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் 80வது அவதாரத் திருநாள் பெருமங்கல முத்து விழா மார்ச் 3ம் தேதி மேல்மருவத்தூரில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பூஜைகளும் நலத்திட்ட உதவிகளும் நடைபெற்று வருகிறது. இதன்  ஒரு அங்கமாக  இன்று கலவையில் ஆதிபராசக்தி கல்விக் குழுமத்தின் வளாகத்தில் ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் மற்றும் திருமதி இலட்சுமி பங்காரு அடிகளார்  அவர்களின் பெருமங்கல முத்து விழா சிறப்பாக நடைபெற்றது. 

இன்று காலை 10.30 மணிக்கு கலவைக்கு  எழுந்தருளிய அருள்திரு அடிகளார் அவர்களுக்கு பாத பூஜையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 10.45 மணிக்கு ஆன்மிககுரு அருள்திரு அடிகளார்  அவர்கள் ஆதிபராசக்தி கலையரங்கத்தை  திறந்து வைத்தார். மாலை 4.50 மணியளவில் மேடை நிகழ்ச்சிகள் மூலமந்திரம் மற்றும் தமிழ்த்தாய்  வாழ்த்துடன்  துவங்கியது. தொடர்ந்து விழாவிற்கு வருகை புரிந்த விருந்தினர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

விழாவிற்கு ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ மற்றும் பண்பாட்டு அறநிலையத்தின் அறங்காவலர்கள் கோ.ப.செந்தில்குமார், ப.ஸ்ரீதேவிரமேஷ்,  ப.உமாதேவி ஜெய்கணேஷ், ஆஷா அன்பழகன் மற்றும் பல் மருத்துவ கல்லூரியின் தாளாளரும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் இயக்குனருமான த.ரமேஷ், சேலம் தொழிலதிபர் ப.ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி பாராமெடிக்கல் கல்லூரிகளின் தாளாளர் இ.ஸ்ரீலேகா செந்தில்குமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.  

பின்னர், சிறப்பு விருந்தினர்களாக இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், வேலூர் நாராயணிபீடம் ஸ்ரீசக்தி அம்மா, வேலூர் ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத் தலைவர் கலவை சச்சிதானந்த சுவாமிகள்,  அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் சா.ஜெகத்ரட்சகன், ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் கி. விஷ்ணு பிரசாத், இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜா.ல.ஈஸ்வரப்பன் மற்றும் திருக்கைலாய திருப்பணி நிறுவனர் சிவஸ்ரீ செ.ராஜேந்திரன், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத்தலைவர் கோ.வி.செல்வம், ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளையின் தலைவர் ஜா.லஷ்மணன், வாணியம்பாடி பேராசிரியர் தி.மு.அப்துல்காதர், வேலூர் திருமண்டிலம் அருட்தந்தை முனைவர் டி.எஸ்.சி.மேனன், ஆற்காடு தொழிலதிபர் மு.சௌகத்அலி ஆகியோர்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ மற்றும் பண்பாட்டு அறநிலையத்தின் அறங்காவலர் கோ.ப.அன்பழகன் சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து ஆதிபராசக்தி குழுமக் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் திருமதி. இலட்சுமி பங்காரு அடிகளார் ஏற்புரை ஆற்றினார்.

ரூ.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் 

விழாவில், நலத்திட்ட உதவியாக பயனாளிகளுக்கு ரூபாய் 80 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அருள்திரு அடிகளார் அவர்கள் வழங்கினார். இத்திட்டத்தில் அடிப்படையில் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள்  பள்ளிகளுக்கு  80 நவீனக் கழிப்பிடங்கள் கட்டிதரப்படும். தற்போது பத்து கழிப்பிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 80 ஆயிரம்  மரக்கன்றுகள்  அரசாங்க  இடம் மற்றும் பொது இடங்களில் நட்டு பராமரிக்கப்படும்.  

அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு உலக வரைபடம்  பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2  மாணவர்களுக்கு உயர்கல்வி தகுதி பெற 1000 எண்ணிக்கையிலான கேள்வி பதில்கள் அடங்கிய கையேடுகள்; மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளுக்கு  கம்ப்யூட்டர், பிரிண்டர், பேன், மேஜை, நாற்காலி, இரும்பு பீரோ மற்றும் கரும்பலகை வழங்கப்பட்டது. கலவை, ஆற்காடு தாலூக்காவிற்கு கம்ப்யூட்டர் மேஜை, குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது. கலவை அரசு மருத்துவமனைக்கு  இன்வெட்டர் பேட்டரி போன்றவை வழங்கப்பட்டது. 

தொடர்ந்து, கலவை ஆதிபராசக்தி குழுமக் கல்லூரி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆதிபராசக்தி கல்விக் குழுமத்தின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றம் ஊழியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர். ஆதிபராசக்தி குழுமக் கல்வி செயலர் இரா. கருணாநிதி நன்றியுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து

சக்தி.ப.சந்திரசேகரன், பழனிFeb 21, 2020 - 10:24:34 AM | Posted IP 162.1*****

அம்மா அவதாரம் என உலகம் அறியும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory