» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணி: நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்

திங்கள் 17, பிப்ரவரி 2020 8:19:47 PM (IST)

கீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணியினை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார் 

கீழடியில் 2015 முதல் 2019-ம் ஆண்டு வரை 5 கட்டங்களாக  அகழாய்வு பணிகள் நடந்தன. முதல் 3 கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், 4 மற்றும் 5-வது கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண்டன. இதன்மூலம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன.  மண்பாண்ட பொருட்கள், சுடுமண் பொம்மைகள், தங்க, வெள்ளி பொருட்கள், தமிழி எழுத்து பொறித்த பானை ஓடுகள், சூது பவளம் உள்ளிட்ட 15,500 தொண்மை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதற்காக கீழடி அரசு பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.  மேலும் அருங்காட்சியகத்திற்கு தமிழக  பட்ஜெட்டில்  ரூ.12.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் 6-ம் கட்ட அகழாய்வு பணி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தொடங்க உள்ளன. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்தபடி நாளை வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கீழடியில் தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர் ஆசைத்தம்பி, வட்டாட்சியர் மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினவேல் ஆகியோர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory