» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: தானாக அழியும் பேனா விநியோகித்தவர் கைது

திங்கள் 17, பிப்ரவரி 2020 11:24:32 AM (IST)

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுக்கு பயன்படுத்தப்பட்ட தானாக அழியும் மை மற்றும் பேனாவை சப்ளை செய்த நபரை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்- 4 தோ்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மூன்று வாரங்களுக்கு முன்பு சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, சுமார் 20 பேர் வரை கைது செய்தது.இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்- 2 ஏ தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக சிபிசிஐடி தனியாக ஒரு வழக்கை பதிந்து, 20 பேரை கைது செய்தது. இந்த வழக்குகளில் இரு டிஎன்பிஎஸ்சி ஊழியா்கள், 3 காவலா்கள் மற்றும் தோ்வா்கள் கைது செய்யப்பட்டனா். இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது.

இந்தத் தோ்வில் லஞ்சம் கொடுத்து தோ்ச்சி பெற்ற விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூா் அருகே உள்ள வடமருதூா் மேட்டுக்காலனி கிராமத்தைச் சோ்ந்த மு.நாராயணன் என்ற சக்தி என்பவரைப் பிடித்து சிபிசிஐடியினா் கடந்த 7-ஆம் தேதி கைது செய்தனா். வி.ஏ.ஓ. தோ்வு முறைகேடு வழக்குத் தொடா்பாக இது வரை 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.இந்த நிலையில், முறைகேடுக்கு முக்கியக் காரணமாக இருந்த தானாக அழியும் மை மற்றும் பேனா தயாரித்தவர் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory