» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தயாநிதி மாறன் மீது அமைச்சர் ஜெயக்குமார் வழக்குத் தொடர தமிழக அரசு ஒப்புதல்

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 5:08:14 PM (IST)

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது அமைச்சர் ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மற்றும் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு முறைகேடு குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி. தயாநிதி மாறன், அமைச்சர் ஜெயக்குமாருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பல தடைகளைத் தாண்டி படித்துவரும் மாணவர்களின் கனவுகளை அரசு கேலிக் கூத்தாகி வருகிறது என்று தெரிவித்தார்.

அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பொய்யான குற்றச்சாட்டை தயாநிதிமாறன் சுமத்தி வருவதாகத் தெரிவித்தார். இதற்காக தயாநிதிமாறன் மீது வழக்குத் தொடரப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து பேசிய தயாநிதி மாறன் மீது அமைச்சர் ஜெயக்குமார் அவதூறு வழக்குத் தொடர தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory