» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்

சனி 15, பிப்ரவரி 2020 8:24:59 PM (IST)

கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்ட நிலையில், இன்று  மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 

தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இந்த இரு அணு உலைகளிலும் அடிக்கடி மின் உற்பத்தி நிறுத்தப்படுவதும், பராமரிப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் செயல்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இதனிடையே, முதலாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் பழுது தற்போது சரி செய்யப்பட்டு இன்று மாலை மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory