» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிஏஏ எதிர்ப்பு போரட்டத்தில் தடியடி: அதிகாரி மீது நடவடிக்கை - கனிமொழி எம்.பி வலியுறுத்தல்

சனி 15, பிப்ரவரி 2020 5:31:08 PM (IST)

சிஏஏ-க்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மூன்றுக்கும் எதிராக தமிழக அரசு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள்  சார்பில் நேற்று போராட்டம் நடத்தினர். 

இதில் குழந்தைகள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர். அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தைக் கைவிடும் படி போராட்டக்காரகளை எச்சரித்தனர். போராட்டக்காரர்கள் இதற்கு செவிகொடுக்கவில்லை. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்து கற்களும் வீசப்பட்டன. தடியடி மற்றும் தள்ளுமுள்ளுவில் போராட்டக்காரர்கள் 5 பேரும், மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரி உள்பட காவலர்கள் நான்கு பேரும் காயமடைந்தனர். 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி கூறியதாவது:- சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தை போலீசார் உரிய முறையில் கையாளவில்லை என்றும்  சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார்  நிலைமையை தவறாக கையாண்டதால் வன்முறை ஏற்பட்டது. சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.  மேலும் போராட்டத்தை உரிய முறையில் கையாண்டு இருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம் என்று கூறிய அவர் வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

மக்கள்Feb 17, 2020 - 08:52:32 AM | Posted IP 162.1*****

அமைதியாக காவலில் இருந்த காவல் துறையிடம் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டு அமைதியை கெடுத்தது யார் என்று வீடீயோவை பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள். உங்கள் சுயலாப அரசியலுக்காக நாட்டை சீரழிக்காதீர்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory