» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சி துறைக்கு ரூ.6,374 கோடி மானிய தொகை : நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் கோரிக்கை

வெள்ளி 14, பிப்ரவரி 2020 10:16:20 AM (IST)

தமிழக உள்ளாட்சி துறைக்கு ரூ.6,374 கோடி மானிய தொகை வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமனிடம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெல்லியில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை வழங்கினார். 

இதேபோல மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி நரேந்திரசிங் தோமரையும் சந்தித்து அமைச்சர் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், ‘மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் தமிழகத்தின் ஊரகப்பகுதிகளுக்கு வழங்க வேண்டியது ரூ.2,939 கோடி ஆகும். இதில் 2-வது தவணைத்தொகையாக தொழிலாளர் ஊதியம், கட்டுமானம் மற்றும் நிர்வாக செலவினம் ஆகியவற்றுக்காக அளிக்க வேண்டிய ரூ.609 கோடியே 18 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது தமிழக உள்ளாட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, இயக்குனர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசின் 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி துறைக்கு வழங்க வேண்டிய செயலாக்க மானியம் ரூ.2,029.22 கோடி மற்றும் அடிப்படை செயலாக்க மானியம் ரூ.4,345.47 கோடி என மொத்தம் ரூ.6,374.69 கோடி நிதியை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, நிதி மந்திரியிடம் வழங்கப்பட்டு இருக்கிறது” என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரியை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘கோவையில் இருந்து டெல்லிக்கு காலைநேர விமான சேவை ஏற்படுத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory