» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி ஜாமீனில் விடுதலை

வியாழன் 13, பிப்ரவரி 2020 4:02:40 PM (IST)

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததாக, அதிமுகவைச் சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரின் பேரில் ஜன. 25ம் தேதி கோவை லாலிரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து விசாரணை மேற்கொள்ள சூலூர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் கோவை நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக  முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி  ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory