» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புதன் 12, பிப்ரவரி 2020 8:36:04 PM (IST)

கோயமுத்தூரில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோயமுத்தூரில் பீளமேடு, அவிநாசி ரோடு, காந்திபுரம் காட்டூர், பகுதி வடகோவை மேம்பாலம், சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தொடர்ந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து கோவை காந்திபுரம் காட்டூர் போலீசார் தலைமையில் தனிப்படை அமைத்துத்  தேடி வந்தனர். அப்பொழுது கோவை விளாங்குறிசி ரோடு, சேரன்மாநகர்,பி. ஆர். கே நகர் பகுதியில் வசிக்கும் காசி என்பவருடைய மகன் சக்திவேல் (24). கஞ்சா வியாபாரி. மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த போது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர் உட்பட அனைத்து காவல் நிலையங்களிலும் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இதை தொடர்ந்து மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து காந்திபுரம் காட்டூர் போலீசார் பரிந்துரையின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு இன்று உத்தரவு பிறப்பித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory