» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஏஓ தேர்விலும் முறைகேடு: ரூ.15 லட்சம் கொடுத்து பணியில் சேர்ந்தவர் சிக்கினார்

வெள்ளி 7, பிப்ரவரி 2020 8:23:37 AM (IST)

ரூ.15 லட்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி சி.பி.சி.ஐ.டி. போலீசில் சிக்கினார். இதன்மூலம் 2016-ம் ஆண்டு நடந்த குரூப்-4 கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். இதனைத்தொடர்ந்து இந்த முறைகேடுகளில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த முறைகேடுகளுக்கு இடைத்தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளியாக செயல்பட்ட விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராம நிர்வாக அதிகாரியான நாராயணன் என்ற சக்தி என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் சித்தாண்டி, பூபதி, முத்துக்குமார் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி சக்தி மூலமாகத்தான் ஜெயக்குமாரிடம் பணத்தை கொடுத்துள்ளனர். போலீஸ்காரர் சித்தாண்டி ரூ.2 கோடி வரை பணம் கொடுத்து 22 பேரை முறைகேடாக அரசு வேலையில் சேர்த்துள்ளார். கைதான இன்னொரு போலீஸ்காரர் பூபதியும் ரூ.55 லட்சம் கொடுத்து 5 பேரை அரசு வேலையில் சேர்த்துள்ளார். கிராம நிர்வாக அதிகாரி நாராயணன் என்ற சக்தி நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார். கைது செய்யப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. 

அவரிடம் நடத்திய விசாரணையில் 2016-ம் ஆண்டு குரூப்-4 கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது. அந்த தேர்வில் கலந்துகொண்ட கிராம நிர்வாக அதிகாரி சக்தி ரூ.15 லட்சத்தை இடைத்தரகர் ஜெயக்குமார் மூலம் கொடுத்து வேலையில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது. நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ள ஜெயக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அப்போது மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் சித்தாண்டி, பூபதி, முத்துக்குமார் ஆகியோர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிFeb 7, 2020 - 10:14:33 AM | Posted IP 108.1*****

இந்த வி ஏ ஓ வேலைக்கு பதினைந்து லட்சம் கொடுத்தான் என்றால் எவ்வளவு சம்பாதிக்க திட்டம் போட்டு இருப்பான்? அடேங்கப்பா மந்திரிகளையே மிஞ்சிருவான போல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory