» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வு தட்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு

வியாழன் 6, பிப்ரவரி 2020 8:46:27 PM (IST)

தமிழகத்தில் தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு பிப்.10-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு கடந்த ஜன.27-ஆம் தேதி முதல் ஜன.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. மேற்கண்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

நிகழாண்டு ஜன.1ஆம் தேதியன்று பன்னிரெண்டரை வயது பூா்த்தி அடைந்த தனித்தோ்வா்கள் தக்கல் திட்டத்தின் கீழ் பிப்.10ஆம் தேதி முதல் பிப்.12-ஆம் தேதி மூன்று நாள்களுக்கு மட்டும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணம் ரூ.125 சிறப்புக் கட்டணம் ரூ.500 விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675-ஐ தனித்தோ்வா்கள் சேவை மையங்களிலேயே நேரடியாக செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். ஆன்லைன் விண்ணப்பங்களை தோ்வா்கள் பிப்.12-ஆம் தேதி மாலை 5 மையங்களில் சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என அரசுத் தோ்வுகள் இயக்குநா்  தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory