» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் வீட்டில் வருமான வரி சோதனைக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

வியாழன் 6, பிப்ரவரி 2020 4:13:51 PM (IST)

விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதில் அரசுக்கு சம்பந்தம்  இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்  சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் ஆதாரமின்றி எதுவும் சொல்லக்கூடாது. வதந்தியை பரப்பாமல் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வதந்தி பரப்புபவர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பும். பாமக நூறு சதவீதம் கூட்டணியில்தான் உள்ளது. கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவே ராமதாஸ் அவ்வாறு பேசியிருக்கிறார். 

இது ஜனநாயக நாடு, இங்கு யாரையும் யாரும் பழிவாங்க முடியாது. வருமான வரி சோதனை நடப்பதில் அரசுக்கு சம்பந்தம் இல்லை. அவர்கள் கடமையை செய்து வருகிறார்கள். வருமானவரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகள் உள்பட 35 இடங்களில் வருமானவரித் துறையினர் நேற்று (புதன்கிழமை) சோதனை செய்தனர். இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதில் இரு திரைப்பட நிறுவனங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory