» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காலணியைக் கழற்ற, சிறுவனை அழைத்தது ஏன்? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்விளக்கம்

வியாழன் 6, பிப்ரவரி 2020 3:43:39 PM (IST)

முதுமலையில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவனைக் கூப்பிட்டு காலணியை கழற்ற வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் இன்று யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நீலகிரி மாவட்ட ஆட்சியர்  இன்னவென்ட் திவ்யா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நடந்து சென்ற போது, அங்கிருந்த சிறுவனை அழைத்து, தனது செருப்பை கழற்றச் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து அவரே செய்தி ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், இன்று நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் தொடங்கியது. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு சத்துணவு அளிப்பதற்காக, நானும், நீலகிரி மாவட்ட ஆட்சியர், அரசுச் செயலர்கள், வனத்துறை அதிகாரிகள் உட்பட 100 பேருடன் வந்திருந்தோம். யானைகளுக்கு உணவு கொடுக்கச் சென்ற போது, அங்கு ஒரு கோயில் இருந்தது. அங்குச் சென்று சுவாமி கும்பிட வேண்டும் என்பதால், ஷூவின் லேஸ் கழற்ற வேண்டியது இருந்தது.

பார்த்தால்.. என்னைச் சுற்றிப் பார்த்த போது பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட எல்லோரும் வயதான அதிகாரிகளாக இருந்தார்கள்.  அங்கே இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் பார்க்க என் பேரனைப் போன்று இருந்தார். எனவே அவரை அழைத்து கழற்றிவிடுமாறு சொன்னேன். அவ்வளவுதான். எனவே இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அவரை என் பேரனாக நினைத்துத்தான் காலணியை கழற்றிவிடச் சொன்னேன்.  இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதையும், எனது மறுப்பையும் தெரிவித்துக்  கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

vadivelFeb 7, 2020 - 03:49:22 PM | Posted IP 108.1*****

seruppa kooda kalatta theriyathavan MANTHIRI.....HI HI HI

ராமநாதபூபதிFeb 7, 2020 - 03:17:18 PM | Posted IP 162.1*****

வீட்டுக்கு போய் செருப்பை எப்படி கழட்டுவ ராசா? அங்கேயும் பேரன் இருக்கானா

உண்மைFeb 6, 2020 - 04:27:45 PM | Posted IP 108.1*****

பேரனாக இருந்தாலும் குண்டி கழுவ சொன்னா கொடுப்பியா

சாமிFeb 6, 2020 - 03:51:09 PM | Posted IP 162.1*****

உன் பேரனை இன்னொருத்தன் செருப்பை கழட்ட சொன்ன பொறுத்துக்கொள்வாயா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory