» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப்- 4 முறைகேடு விவகாரம் : இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண்

வியாழன் 6, பிப்ரவரி 2020 1:45:18 PM (IST)

குரூப்- 4 முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

தமிழகத்தில் 2019 செப்டம்பர் மாதம் நடந்த குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அரசு பணியாளர் தேர்வாணையம் நிர்வாகம் நடத்திய விசாரணையில் குரூப் 4 போட்டி தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் கண்டுபடித்து, அவர்களுக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் நடத்தி வரும் விசாரணையில் அரசு அதிகாரிகள், இடைத் தரகர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குரூப்- 4 முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory