» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் விஜய் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

வியாழன் 6, பிப்ரவரி 2020 8:10:44 AM (IST)

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த  பிகில் திரைப்படம் ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது.  இந்நிறுவனத்துக்குரிய 20 இடங்களில் காலை முதல் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு கடன் கொடுத்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வசித்து வரும் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரி துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  "மாஸ்டர் ” என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு கடலூரில் உள்ள நெய்வேலி என்.எல்.சி. 2வது சுரங்க பகுதியில் நடந்து வந்தது.

இப்படப்பிடிப்பு நடைபெறும் தளத்திற்கு சென்ற வருமான வரி துறை அவருக்கு சம்மன் வழங்கியது.  நடிகர் விஜய்க்கு சம்மன் வழங்கியது படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை விசாரித்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜயை வருமான வரித்துறையினர் அழைத்து சென்றனர். விஜயிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரது காரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர்.

பிகில் பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜயிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.  இதனிடையே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.  இதேபோன்று நீலாங்கரையில் உள்ள மற்றொரு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல் பிகில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory