» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏஜிஎஸ் சினிமாஸ், அன்புச்செழியன் ஆபீஸ் ரெய்டு : ரூ. 24 கோடி, தங்க நகைகள் பறிமுதல் ?

புதன் 5, பிப்ரவரி 2020 8:30:38 PM (IST)

தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ், அன்புச்செழியன் ஆபீஸ் ரெய்டு ரூ. 24 கோடி, தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் வீடு, அலுவலகம், ஏஜிஎஸ் சினிமாஸுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.இது தவிர சினிமா பட பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளில் கணக்கில் வராத ரூ. 24 கோடி பணமும், ஏராளமான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கும் வருமான வரித்துறையினர் சென்று விஜய்யை தங்கள் காரிலேயே அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடுகளில், பனையூரில் உள்ள பண்ணை வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் வருமான வரித்துறையினர் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் வீட்டில் சோதனை நடத்தி கணக்கில் வராத ரொக்கம், ஆவணங்களை கைப்பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory